நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் !பிரதமர் நரேந்திர  மோடி வாழ்த்து

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர  மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

இன்று  நாடு முழுவதும்  பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி மசூதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

வெவ்வேறு நாட்டினர் இந்த பண்டிகையை துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையிலிருந்து பதிமூன்றாம் பிறை வரையில் கொண்டாடுவது வழக்கம். ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது.அவ்வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு இன்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர  மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர்  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .பக்ரீத் பண்டிகை அமைதி மகிழ்ச்சியை  சமூகத்தில் மேலும் அதிகரிக்கும் என்று  நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.