நரேந்திர மோடி, அம்பானி, அதானி மூவரும் சுதந்திரப்போரட்ட தியாகிகள்…!எம்.பி.ஜோதிமணி ட்வீட்…!

கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து எம்.பி.ஜோதிமணி ட்வீட். 

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மொடேராவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். இந்த அரங்கத்தில் 1.10 லட்சம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். 2018-ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தால், புதிய அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  உலகின் மிகப் பெரிய  படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்.பி.ஜோதிமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நரேந்திர மோடி, அம்பானி, அதானி மூவரும் சுதந்திரப்போரட்ட தியாகிகள். அதனால் தான் சர்தார் வல்லபாய் படேலின் பெயரை எடுத்துவிட்டு கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அவர்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளது! இதைவிட வெட்கம்கெட்ட ஒரு செயல் இருக்கமுடியாது.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.