,
LeoFirstSingle

பட்டையை கிளப்பும் லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடல்…வெளியானது புத்தம் புது ப்ரோமோ.!!

By

நடிகர் விஜய் வரும் ஜூன் 22 -ஆம் தேதி 49 -வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு, அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளை மறுநாள் பாடல் வெளியாகவுள்ள நிலையில், தற்போது பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ப்ரோமோவில் வரும் பாடலின் இசை காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. எனவே, கண்டிப்பாக இந்த பாடலும் மிகப்பெரிய வெற்றிபெறும் என தெரிகிறது.

இந்த பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய்யும், பிக் பாஸ் பிரபலம் அசல்  கோளாறுவும் இணைந்து பாடியுள்ளார்கள். பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். மேலும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.