மீண்டும் இணைந்த மீசையை முறுக்கு கூட்டணி! நான் சிரித்தால்…!

மீசையை முறுக்கு படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தை சுந்தர் சி தயாரித்து இருந்தார். இந்த படத்தை அடுத்து ஹிப் ஹாப் ஆதி நட்பே துணை எனும் படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதற்கடுத்து மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில்  ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் இந்த படத்திற்கு நான் சிரித்தால் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இராணா எனும் புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியானது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.