7 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது – அமைச்சர் அன்பில் மகேஷ்

நெல் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஏழு விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை வழங்கியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 ஆவது தேசிய நெல் திருவிழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது திருவிழாவானது பாரம்பரிய நெல் ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கப்பட்டது.

நம்மாழ்வாரின் மறைவிற்குப்பின் இத்திருவிழாவை நெல் ஜெயராமன் அவர்கள் வழிநடத்தினார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஜெயராமன் டிசம்பர் 6-ஆம் தேதி காலமானார். இவரது மறைவிற்கு பின் இத்திருவிழா நடைபெறுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், இன்று திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழா தொடங்குவதற்கு முன்பாக நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாளையும் நடைபெற உள்ள திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ளவுள்ளனர். திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஏழு விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை வழங்கியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment