நாளை காலை நம்ம வீட்டு பிள்ளை படத்திலிருந்து இந்த அண்ணன் வெளியே வருகிறான்!

சிவகார்த்திகேயன் தற்போது நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து உள்ளது. இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு டி,இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இருந்து முதல் பாடலான என் அண்ணன் எனும் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என பட குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.