சகல வசதிகளுடன் கூடிய ஆட்டோ வீடு 1 லட்சம் ரூபாய் மட்டுமே.!நாமக்கல் இளைஞர் அசத்தல் கண்டுபிடிப்பு.!

சகல வசதிகளுடன் கூடிய ஆட்டோ வீடு 1 லட்சம் ரூபாய் மட்டுமே.!நாமக்கல் இளைஞர் அசத்தல் கண்டுபிடிப்பு.!

  • நாமக்கலை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், வீடு இல்லாதவர்கள் குறைந்த செலவில் வசிப்பதற்கு நடமாடும் வீட்டை வடிவமைத்துள்ளார்.
  • இந்த ஆட்டோ வீடு ரூ.1,00,000 மதிப்பில், பல சிறப்பம்சங்கள் நிறைந்த சூரிய மின்சக்தி மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தில் படித்து பயின்றதை நடைமுறைக்கு ஏற்றவாறு புதிய கண்டுபிடிப்புகளை மாற்றுவதை கல்வியின் சிறப்பாக அமைகிறது. பின்னர் தற்போது உள்ள இளைஞர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு புது புது கண்டுபிடிப்புகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அருண் பிரபு என்பவர் ஆட்டோ ஒன்றை நடமாடும் வீடாக வடிவமைத்துள்ளார். அவர் கட்டடக் கலையில் பட்டம் பெற்றவர், அதனால் நவீன வசதிகளுடன் கூடிய ஆட்டோவை வீடாக மாற்றியிருக்கிறார்.

இந்நிலையில், குறைந்த இடத்தில் தேவைப்படும் வசதிகளுடன் இருக்கும் இந்த ஆட்டோ வீடு ரூ.1,00,000 மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ வீட்டில் சமையல் செய்யும் இடம், படுக்கை அறை, கழிப்பிடம், துணிகளை காயவைக்கும் இடம் உள்ளிட்டவை இடம்பெறுகிறது. மேலும், ஆட்டோவின் மேல் பகுதியில் மொட்டை மாடியில் உள்ள வசதிகளும் இருப்பது கூடுதல் சிறப்பாக அமைகிறது. பின்னர் வீட்டிற்கு தேவையான மின்சாரம் முழுவதும் சூரிய மின் சக்தி (solar system) மூலமாக தயாரிக்கப்படுகிறது.

மேலும், வீடு இல்லாத ஏழை மக்களுக்கும், வெவ்வேறு இடங்களுக்கும் சென்று தொழில் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு இந்த வீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொறியியல் பட்டதாரி அருண் பிரபு கூறிகிறார்.

தற்போது பொறியியல் படிப்பிற்கு வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என கூறப்படும் வேலையில் ஆர்வத்துடன் கல்வி கற்றால் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக இந்த ஆட்டோ வீடு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube