நளினி தொடர்ந்த வழக்கு – தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நளினி சட்டவிரோதமாக சிறையில் இருக்கிறாரா என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில்   7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணையில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அப்பொழுது ,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனின் மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது பற்றி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்றும் நளினியின் மனு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தது.மேலும் 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை 2018 -ஆம் ஆண்டிலே நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது.இறுதியாக சென்னை உயர்நீதிமன்றம்  இன்று (பிப்ரவரி  12-ஆம் தேதி) ஒத்திவைத்தது.
இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில் நளினி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அதாவது, விடுதலை செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் 7 பேரையும் சட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளதால் இந்த  மனு விசாரணைக்கு உகந்ததுதான்.எனவே ஆளுநர் கையெழுதுகூட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.இதேபோல் அரசு தரப்பில் அளிக்கப்பட விளக்கத்தில்,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . 7 பேரை விடுதலை செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது.இறுதியாக நீதிமன்றம் ,நளினி சிறையில் இருப்பது சட்டவிரோத காவலா? சட்டப்பூர்வ காவலா? என்று  பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க   உத்தரவு  பிறப்பித்து வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து.

 

Recent Posts

இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது! மும்பையை விளாசிய மனோஜ் திவாரி!

Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…

5 mins ago

யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்திய எல்லைகள்.? அமித்ஷா பேச்சால் குழப்பம்.!

West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…

34 mins ago

திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…

1 hour ago

மீண்டும் சிஎஸ்கே-வில் இணைந்த கான்வே …ஆனா இதை எதிர்ப்பார்கல ..!

Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார்…

1 hour ago

எம்.ஜி.ஆர் சொன்ன விஷயம்? கண்கலங்கி கதறி அழுத சிவாஜி கணேசன்!

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக…

1 hour ago

என்னையாவா ஒதுக்குறீங்க ? சொல்லி அடிக்கும் சாஹல் .. ஐபிஎல்லில் புதிய மைல்கல் !!

Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…

2 hours ago