சாலையில் ஆணிகள் பதிப்பு – சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள் – ராகுல் காந்தி ட்வீட்

சாலையில் ஆணிகள் பதிப்பு – சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள் – ராகுல் காந்தி ட்வீட்

சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள் என்று இந்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுக்கும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுலபமான முடிவு எட்டப்படவில்லை. அனைத்தும் தோல்விலேயே முடிவடைந்தது.

இதனிடையே, குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் டெல்லி காவல்துறைக்கும், விவசாயிகளுக்கு இடையே வன்முறை வெடித்தது. பின்னர் செங்கோட்டையை முற்றிகையிட்டு தேசிய கொடி கம்பத்தில், விவாசாய கொடியை ஏற்றினது நாடு முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லி – உத்தரபிரதேச எல்லையான காசிப்பூரில் தடுப்புகள் அமைத்து சாலைகளால் ஆணிகள் பதித்துள்ளது டெல்லி காவல்துறை. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள் என்று இந்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube