தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் சங்க தலைவர் நாசர் தலைமையில் தொடங்கியது. இதில் நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் என 1000கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்து உட்பட கடந்த காலங்களில் உயிரிழந்த 64 உறுப்பினர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கூட்டத்தில் பேசிய நாசர், இது நடிகர் சங்கம் அல்ல குடும்பம், சில சட்டசிக்கலினால் இந்த பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போனது.
இப்படி, தள்ளி செல்லச்செல்ல காதலுக்கான ஏக்கம் இன்னும் பெருகும் என்பதைப்போல, உங்களை பார்க்க வேண்டும் என்கின்ற ஆர்வம் மேலும் அதிகரித்தது. நமக்கு உடம்பும் உடலும்தான் முக்கியம் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.