“ஹ்வாங்கே” மாகாணத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த – கிம் ஜாங்-உன்

“ஹ்வாங்கே” மாகாணத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த – கிம் ஜாங்-உன்

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் வட Hwanghae மாகாணத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த கிராமத்திற்கு ஆய்வு செய்தார்.

North Hwanghae Province பகுதிற்கு ஆய்வு மேகொண்டபோது, ​​கிம் தனது சிறப்பு தானியங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பவும், சேதமடைந்த இடங்களை மீண்டும் கட்டியெழுப்ப சிமென்ட் போன்ற தேவையான பொருட்களைப் பயன்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் மருந்துகள் மற்றும் பிற தேவைகளை விரைவாக வழங்க  கிம்  உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மாநில விவகார ஆணையத்தின் கீழ் உணவு மற்றும் தானியங்களை வழங்க உத்தரவிட்டார்.

பல நாட்களாக நாட்டில் பலத்த மழை பெய்து வந்ததால் கிட்டத்தட்ட 730 வீடுகளும் 600 ஏக்கர் நெல் வயல்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 179 வீடுகள் நீரில் மூழ்கியது ஆனால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கொரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று கிம் தொழிலாளர் கட்சியின் செயற்குழு கவுன்சில் கூட்டத்தை கூட்டி, கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கேசோங் நகரத்திற்கு சிறப்பு உதவிக்கு உத்தரவிட்டதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

முன்னதாக, ஹுவாங்கே மாகாணத்திற்கும், கேசோங் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் வடக்கு சிறப்பு கன மழை எச்சரிக்கைக கொடுக்கப்பட்டுள்ளது .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube