கொரோனா தடுப்பில் N-95 மாஸ்குகள் பயனுள்ளதாக உள்ளது – இந்திய விஞ்ஞானிகள்!

கொரோனா வைரஸ் தடுப்பில் N-95 மாஸ்குகள் பயனுள்ளதாக உள்ளது என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மக்களால் பயன்படுத்தப்படும் முக கவசங்களில் N-95 எனும் முக கவசம் அதிகளவில் கொரோனா தடுப்புக்கு உபயோகமுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரோவைச் சேர்ந்த பத்மநாப பிரசன்னா சிம்ஹாவும், கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பிரசன்னா சிம்ஹா மோகன்ரா ஆகியோரும் இணைந்து முகக்கவசங்களின் இருமல் தோற்று குறித்து ஆராய்ந்துள்ளனர்.

N95 முகமூடிகள் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளன மற்றும் கிடைமட்ட பரவலை 0.1 முதல் 0.25 மீட்டர் வரை முழுமையாகக் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் N-95 மாஸ்குகள் மிகவும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.

author avatar
Rebekal