என் மகன் இறந்துவிட்டான்..என் 2 பேரன்களை அனுப்புவேன்.! வீரமரணமடைந்தவரின் தந்தை உருக்கமான பேச்சு

சீனாவுடனான மோதலில்20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் பீகாரை சேர்ந்த குந்தன் குமாரின் தந்தை உருக்கமான பேச்சு வெளியாகியுள்ளது.

லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் நேற்று இரவு வெளியாக தகவலின் படி, இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 20 ராணுவ வீரர்களின் பட்டியலில் இன்று வெளியானது.

அதில் வீரமணரமடைந்த பீகாரை சேர்ந்த குந்தன் குமாரின் தந்தை, ANI செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கும் போது, “என் மகன் தேசத்துக்காக உயிரை தியாகம் செய்துள்ளான் ஆனால் எனக்கு இரண்டு பேரன்கள் உள்ளனர், அவர்களையும் அனுப்புவேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.