என் தந்தை கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தர் – ஓ.பி.எஸ்..!

என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர். அவருடைய பெட்டியில் மனோகரா பராசக்தி கதைகள் இருக்கும் என ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

இன்று சட்டப்பேரவை தொடங்கியபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு  நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் பேரவையில் அறிவித்தார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிக்கு காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், கலைஞர் நினைவிடம் குறித்த அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். இந்த அறிவிப்பை முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம். என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர். அவருடைய பெட்டியில் மனோகரா பராசக்தி கதைகள் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து படித்துள்ளோம். வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும்.

50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி; பல்வேறு சிறப்பு மிக்க சட்டங்களை கொண்டு வந்தவர். சமுதாயத்தை சீர் திருத்தும் கருத்துக்கள் அடங்கியதுதான் கலைஞர் எழுத்துக்களால் உருவான பராசக்தி படம் என தெரிவித்தார்.

author avatar
murugan