நானும் எனது தந்தையும் ரஜினியின் ரசிகர்கள்! ராஜபக்சே மகன் அதிரடி!

நானும் எனது தந்தையும் ரஜினியின் ரசிகர்கள்! ராஜபக்சே மகன் அதிரடி!

  • ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை.
  • நானும் எனது தந்தையரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 9-ம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், நடிகர் ரஜினிக்கு இலங்கை அரசாங்கம், இலங்கை செல்ல விசா தர மறுத்ததாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து, ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை. நானும் எனது தந்தையரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube