முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்… முதல்வர் ஸ்டாலின் உரை.!

By

Stalin Secretary

முத்திரை பதிக்கும் முத்தான திட்டம் தலைப்பில் ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை.

தமிழக அரசு தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசு சம்மந்தப்பட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட முத்திரை பதிக்கும் முத்தான திட்டம் என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் அரசு கொண்டுவந்த நலத்திட்டங்கள் பற்றி உரையாற்றினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசியதாவது, ஒரு திட்டம் நிறைவேற்றுவது என்பது அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பின் காரணமாக தான், அதனை அரசு நிர்வாகிகளாகிய நீங்கள் விரைந்து நிறைவேற்றியது பாராட்டத்தக்கது. சில திட்டங்கள் மீதான நடவடிக்கை தொய்வாக இருப்பது இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அறியப்பட்டுள்ளது, அதன்மீது இன்னும் நடவடிக்கை தேவைப்படுகிறது.

சரியான திட்டமிடுதல் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் திட்டங்களை அணுகினால் விரைந்து அத்திட்டங்களை முடிக்கலாம். தேவையான நிதி உதவி மற்றும் பிற துறைகளின் ஒருங்கிணைப்பிற்கு சம்மந்தப்பட்ட துறைச்செயலாளர்கள் கவனம் செலுத்துமாறும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.