மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.! மத்திய அரசு அறிவிப்பு.!

  • பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து வந்த ஹிந்து, கிறிஸ்துவம், சீக்கியம், பார்சி ஆகிய 6 மதங்களை சேர்த்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது.
  • இந்நிலையில், தாங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்த்தவர்கள் என்ற ஆதாரத்தையும், மற்றும் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவிற்கு வந்ததற்கான ஆவணங்களையும், சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாட்டில் உள்ள பல இடங்களில் பல்வேறு தரப்பினர்கள் அவர்களது எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் நாடே போர்க்களமாக மாறியது. பின்னர் தொடர்ந்து அந்த சட்டத்திற்கு தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு, 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தவர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருத்தப்படமாட்டார்கள் என்றும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்றும், இந்த சட்ட திருத்த மசோதா கூறுகிறது.

இந்நிலையில், மூன்று நாடுகளில் இருந்து வந்த ஹிந்து, கிறிஸ்துவம், சீக்கியம், பார்சி ஆகிய 6 மதங்களை சேர்த்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இதனால் தங்களது மதத்திற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உயர் அதிகாரி கூறுகையில், இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட 6 மதத்தினரும், தாங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்த்தவர்கள் என்ற  ஆதாரத்தையும், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவிற்கு வந்ததற்கான ஆவணங்களையும், அளிக்க வேண்டும். பின்னர் இதுதொடர்பான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அதே சமயத்தில் மேற்கண்ட 3 நாடுகளில் இருந்து அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க தனி விதிமுறைகள் சேர்க்கப்படும். பின்னர் அவர்களுக்கு 3 மாத கால அவகாசம் மட்டும் அளிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அதிகாரி தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்