BAFTA அமைப்பின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்.!

உலகெங்கிலும் உள்ள திறமைசாலிகளை கண்டறியும் பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்(பாப்டா) என்ற அமைப்பின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் செய்துள்ளார்.

இந்தியாவில் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு தான் பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்(பாப்டா).மேலும் இந்த அமைப்பு உலகெங்கிலும் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களின் திறைமையை கண்டறிந்து கலைஞர்களாக உயர்த்த இந்த அமைப்பு உதவும் .

அதே போன்று இந்தியாவில் திரைப்படம், விளையாட்டு, தொலைக்காட்சி உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் 5 பேரின் திறமைகளை கண்டறிந்தும் பாப்டா விருது வழங்கி வருகிறது.அந்த வகையில் இந்த அமைப்பின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் செய்துள்ளார்.ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்‌.ரஹ்மான் பாப்டாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.தற்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.