27 C
Chennai
Friday, December 4, 2020

கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை!

கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தான் 27 வயதான மணிகண்டன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பதாக மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் வைத்து 17 வயது இளைஞன் வசந்த் என்பவரை கொலை செய்து குற்றவாளியாக சிறைக்கு சென்று ஒரு மாதத்திற்கு முன்புதான் பிணையில் வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதால் ஏரியாவில் தான்தான் பெரிய ஆள் எனவும் ஜெயிலுக்குப் போயிட்டு வந்ததால ஏரியாவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் நான் சொல்வது தான் கேட்க வேண்டும் எனவும் இவர் கூறி வந்துள்ளார்.
நிலையில் மணிகண்டன் வசித்து வரக்கூடிய அதே பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு  என்பவரின் நண்பர் சிவாவிடம் ஆனந்தபாபு உடன் சேர்ந்து இனி ஏரியாவில் நீ சீன் போட கூடாது, நான் மட்டும் தான் போடுவேன் மீறினால் கொலை செய்துவிடுவேன் என கூறியுள்ளார். ஆனந்தபாபு ஒரு கூட்டமாகவும் மணிகண்டன் ஒரு கூட்டமாகவும் ஏரியாவில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஏரியாவில் இந்த இரண்டு கேங்க்கும் இடையில் அண்மையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் ஆனந்தபாபுவின் நண்பர்களான சிவா, கார்த்திக், ஸ்ரீதர், பரத்வராஜ் அனைவரும் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த 23ஆம் தேதி மாலை மணிகண்டன் வழக்கம்போல ஆட்டோ ஓட்டி விட்டு பத்து மணியளவில் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் உள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இந்த குழு அவரை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்துள்ளனர், இந்நிலையில் இவர்கள் அனைவரையும் போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் தேடி வந்த நிலையில் ஐவரும் தாங்களாகவே நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளனர். தற்பொழுது இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆனந்தபாபு மீது ஏற்கனவே திருட்டு அடிதடி, வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவிற்கு தகவல்களை அனுப்பிய ராஜீவ் சர்மாவிற்கு ஜாமீன்..!

கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் இருந்து கைது செய்யப்பட்ட ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் (Official Secrets Act) கீழ் இந்தியாவின் எல்லை குறித்தும், எல்லை விவகாரத்தில் இந்தியா...

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் 2000 கன அடியாக அதிகரிப்பு.!

தொடர் கனமழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும்...

புரெவி புயலின் தற்போதைய நிலவரம் என்ன ? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை...

ரூ.32,000 டவுன் பேமெண்ட் செலுத்தினால் போதும்.. உங்கள் வீட்டில் Alto 800!

சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ 800 காரை நீங்கள் ரூ.32,000 டவுன் பேமெண்ட் செலுத்தி உங்கள் வீட்டிற்கு எடுத்து செல்லலாம். இந்திய மக்கள் பலர், தற்பொழுது கார்கள் வாங்குவதை நோக்கி நகரத் தொடங்கினார்கள். தற்போதைய காலகட்டத்தில்...

Related news