, ,

வங்கிக்குள் கொலை முயற்சி! துப்பாக்கியால் சுட்டு காப்பாற்றிய காவலாளி!

By

மானாமதுரரையில் சில மாதங்களுக்கு முன்னர் அமமுக பிரமுகர் சரவணன் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதற்க்கு பழிவாங்கும் நோக்கில் மானாமதுரையில் உள்ள வங்கியில் கொலைமுயற்சி நடைபெற்றுள்ளது.

சரவணன் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், தங்கமணி என்பவரை கொலை செய்வதற்காக, அவரை பின் தொடர்ந்து, மானாமதுரையில் உள்ள ஒரு வங்கிக்குள் சென்ற தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது கொலைகார நண்பரும், தங்கமணியை கொலை செய்ய  தாக்கியுள்ளார்கள்.

உடனே சுதாரித்துக்கொண்ட வங்கி காவலாளி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தங்கமணியை தாக்கிய தமிழ்ச்செல்வனை சுட்டுவிட்டார். இதனால் காயமடைந்த தமிழ்ச்செல்வன் அங்கேயே விழுந்துவிட்டார். மற்றவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த தமிழ்ச்செல்வன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Dinasuvadu Media @2023