49 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி ..!

இன்று ஐபிஎல் டி20 தொடரின் 5-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் இறங்கிய மும்பை அணியில்  சூர்யகுமார் அரைசதம் அடிக்காமல் 47 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய ரோஹித் 80 ரன்கள் குவித்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் எடுத்தனர்.

196 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுனில் நரைன், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். சில நிமிடங்களில் சுப்மான் கில் 7 ரன்னில் வெளியேறினர். பின்னர், சுனில் நரைனும் 9 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் , ராணா இருவரும் அணியின் எண்ணிக்கை சற்று உயர்த்தினார். நிதானமாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக்30 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரிலே ராணாவும் 24 ரன்னில் விக்கெட்டை இழக்க அடுத்து களம் கண்ட மோர்கன் 16  , ரஸ்ஸல் 11 ரன்களில்  விக்கெட்டை இழக்க கடைசியில்  இறங்கிய  கம்மின்ஸ் 33 ரன்கள் விளாசினார்.

இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து 49 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

author avatar
murugan