31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

14 ஆண்டு கால கும்ப்ளே சாதனையை எட்டிப்பிடித்த மும்பை வீரர்.! மிரட்டலான பந்துவீச்சு…

5 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி மும்பை அணி வீரர் ஆகாஷ் மத்வால் சாதனை படைத்துள்ளார். 

நேற்று ஐபிஎல் போட்டி தொடரின் எலிமினேட்டர் ஆட்டம்  நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ, தொடர் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்று குஜராத் அணியுடன் மோதவுள்ளது.

இந்த போட்டியில் மும்பை அணி பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்கள் வீசி , வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணி வெற்றிக்கு பெரும் பங்காற்றினார். இதற்கு முன்னர், 2009ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக , பெங்களூரு அணிக்காக விளையாடிய அணில் கும்ப்ளே 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 14 ஆண்டுகால சாதனையை ஆகாஷ் சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.