#IPL2020: அரை சதம் அடித்த படிக்கல் ! மும்பை அணி வெற்றிபெற 165 ரன்கள் இலக்கு

மும்பைக்கு  எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 164 ரன்கள் அடித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 48- வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிவருகின்றது . இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் படிக்கல் – பிலிப்  கூட்டணி களமிறங்கியது. இருவரும் அதிரடியாக  விளையாட , 33 ரன்களில் பிலிப் தனது விக்கெட்டை இழந்தார்.இவரைத்தொடர்ந்து கேப்டன் விராட் 9 ரன்கள் , வில்லியர்ஸ் 15 ரன்கள்,துபே 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்கள். ஒருபுறம் சிறப்பாக விளையாடிய படிக்கல் 74 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய மோரிஸ் , 4 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.இறுதியாக 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே அடித்தது. களத்தில் சுந்தர் 10* ரன்களுடனும் ,குர்கீரத் சிங் 14 * ரன்களுடனும்  இருந்தனர்.165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை  அணி களமிறங்கவுள்ளது.மும்பை  அணியின் பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.