டவ்தே புயல் காரணமாக இன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மும்பை விமான நிலையம் மூடல்!

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள டவ்தே புயல் காரணமாக மும்பை விமான நிலையம் இன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணிவரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்தே புயல் தீவிரமான புயலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் அதிதீவிரமாக மாறிவரும் நிலையில் குஜராத்தில் உள்ள போர்பந்தர் -மதுரையில் இன்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு 11 மணிக்கு கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ள நிலையில், புயல் கரையை கடக்கும் போது 175 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் மும்பை அருகே கடந்து செல்லும் பொழுது மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மும்பையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மும்பையில் அமைக்கப்பட்டுள்ளன கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது என்பதால், புயலால் அங்கு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக கொரோனா சிகிச்சை மையங்களில் தங்க வைத்திருந்த 580 நோயாளிகளை நேற்று இரவோடு இரவாக மாநகராட்சி ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றியது. மேலும் ஆபத்தான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டவ்தே புயல் காரணமாக மும்பை விமான நிலையம் இன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal