பொய்களை பரப்புவதாக டிரம்பின் பேட்டியை நிறுத்திய அமெரிக்க செய்தி நிறுவனங்கள்

அமெரிக்க செய்தி நிறுவனங்கள் டிரம்பின் பேட்டியை நிறுத்தியுள்ளது.

உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக  கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. அந்த வாக்குகளை எண்ணும் பணிகள், நேற்று முன்தினம் நடைபெற்று வருகிறது.இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 214 சபை வாக்குகளை பெற்று பின்னடைவில் இருக்கிறார்.

ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இதற்கு இடையில் டொனால்ட் டிரம்ப்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஜனநாயக கட்சியினர் வாக்குகளை சட்டவிரோதமாக எங்களிடம் இருந்து திருட முயற்சி செய்கின்றனர் எனக் கூறினார்.பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த டிரம்பின் இந்த செய்தியாளர் சந்திப்பு சுமார் 17 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்றது.ஆனால் திடீரென்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் டிரம்பின் பேட்டியை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.டிரம்ப் தவறான செய்திகளை கூறுவதாகவும், பொய்களை பரப்புவதாகவும் பேட்டியை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு சில செய்தி நிறுவனங்கள் மட்டும் டிரம்பின் முழு பேட்டியை ஒளிப்பரப்பு செய்ததாக கூறப்படுகிறது.

Recent Posts

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.! 

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

1 hour ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

2 hours ago

இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…

2 hours ago

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

9 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

12 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

14 hours ago