“Spirit of Cricket ” விருதை வென்ற தல தோனி ! காரணம் தெரியுமா ?

ஐசிசி -யின் “Spirit of Cricket Award of the Decade ” என்ற விருதுக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்து பயணம் :

இந்தியா அணி கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.அப்பொழுது நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்  மோர்கன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.அவருடன் களத்தில் இயன் பெல் விளையாடி கொண்டிருந்தார்.

பவுண்டரி சென்றதா ? இல்லையா ?

அந்த சமயத்தில் அவர் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி செல்ல ,அந்த திசையில் நிறுத்தப்பட்டிருந்த பீல்டர் பிரவின் குமார் பவுண்டரி எல்லைக்கோட்டின் அருகே  ஓடிச் சென்று தடுத்தார்.ஆனால் அந்த பந்து பவுண்டரி என்று அனைவரும் நினைத்தனர்.அதேபோல்  இயன் பெல் பவுண்டரி சென்றுவிட்டது என நினைத்து கிரீஸை விட்டு வெளியே மெதுவாக நடந்து சென்றார்.உடனே பிரவீன்குமார் ஆவேசமாக அந்த பந்தினை தூக்கி ஸ்டம்பை நோக்கி எறிந்தார்.

ரன் அவுட் சர்ச்சை :

இந்த சமயத்தில் பந்தை வாங்கி இந்திய வீரர் பெல்லை ரன் அவுட் செய்தார்.இதனால் இந்த முடிவு மூன்றாவது நடுவருக்கு சென்றது. மூன்றாவது நடுவர் இதனை அவுட் என்று தெரிவித்தார்.நடுவரின் முடிவு திருப்தி அளிக்காத நிலையில் பெவிலியன் ஆவேசமாக பெல் சென்றார். ஆனால் இந்த சம்பவம் நடைபெறும்போது தேனீர் இடைவெளியின் கடைசி ஓவர் ஆகும்.ஆகவே இடைவேளைக்கு பின் பெல் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.பெல் மீண்டும் வருவார் என்று யாரும்  எதிர்ப்பார்க்கவில்லை.

தோனி முடிவு :

இதற்கு முக்கிய காரணம் அப்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி ரன் அவுட் முறையீட்டை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.இதனால் தான் பெல் மீண்டும் களமிறங்கினார்.இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைத்தது.அணி தோல்வி அடைந்ததற்கு விமர்சனங்கள் வந்தாலும் அவரின் அணுகுமுறை அந்த சமயத்தில் பெரிதும் பேசப்பட்டது.

ஐசிசி விருது :

இந்நிலையில் தோனியின் அந்த முடிவுக்கு தான் தற்போது பெரும் மகுடம் ஓன்று கிடைத்துள்ளது.அதாவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த  கடந்த பத்து வருடத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகளை அறிவித்து வருகிறது.அந்த வகையில் “Spirit of Cricket Award of the Decade” என்ற  சிறந்த உத்வேக வீரருக்கான விருதை தோனிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.அதாவது இந்த விருதிற்கு ரசிகர்கள் போட்டியின்றி தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.