mrunal thakur

நீங்க மாப்பிள்ளை பாருங்க கல்யாணம் பண்ணிக்கிறேன்! செம கடுப்பில் மிருணால் தாக்கூர்!

By

சீதா ராமம் திரைப்படத்தில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணால் தாக்கூர். இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு எல்லாம் மொழிகளும் நடிக்க பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், 31-வயதாகும் மிருணால் தாக்கூர் விரைவில் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாகவே பரவி வருகிறது.

   
   

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பேட்டி ஒன்றில் பேசிய மிருணால் தாக்கூர் ” நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்ற தகவலை தெரிந்ததும், கடந்த ஒரு மணி நேரமாக என்னைத் தொடர்ந்து அழைக்கும் அனைவருக்கும் ஒரு தகவலை தெரிவித்து கொள்கிறேன். நான் சொல்ல போகும் விஷயம் உங்களை காயப்படுத்த போகிறது என்றால் மன்னித்துவிடுங்கள் அதற்கு நான் வருந்துகிறேன்.

என்னுடைய திருமணம் பற்றி பரவி வரும் தகவல் முற்றிலும் தவறான வதந்தி. ஏனென்றால் நான் திருமணம் செய்துகொள்ள இப்போது முடிவு செய்யவே இல்லை. இந்த திருமண வதந்தி இதனை நான் முதலில் கேட்டவுடனே மிகவும் சிரித்தேன். இந்த வதந்தி எவ்வளவு வேடிக்கையானது என்பதை என்னால் வார்த்தைகளால் சொல்லவே முடியவில்லை.

கவர்ச்சியை அள்ளி தெளித்தும் பட வாய்ப்புகளே இல்லை! வேதனையில் நடிகை வேதிகா!

இருந்தாலும், என்னுடைய திருமண செய்தியை பற்றி வதந்தியாக தகவலை சிலர் சொன்னதும் என்னால் இதனை பற்றி விளக்கம் கொடுக்காமல் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் தான் உடனடியாகவே நான் விளக்கம் கொடுத்து இருக்கிறேன். இறுதியாக என்னுடைய திருமண வதந்தியை பரப்பியவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

அது என்னவென்றால், நீங்கள் மாப்பிள்ளையை கண்டுபிடித்து என்னிடம் கூறுங்கள் நான் திருமணம் செய்து கொள்கிறேன்” என சற்று காட்டத்துடன் மிருணால் தாக்கூர் கூறினார்.மேலும், நடிகை மிருணால் தாக்கூர் தற்போது ஹிந்தியில் பூஜா மேரி ஜான் என்ற திரைப்படத்திலும், தெலுங்கில் பேமிலி ஸ்டார் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதை தவிர சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கவும் ஒரு படத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023