ம.பி: எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது.!

மத்தியப்பிரதேசத்தில் நேற்று இரவு எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டது.

நாட்டையே உலுக்கிய ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். பலரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நேற்று இரவு ஏற்பட்ட இந்த சிறிய விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமில்லை, ரயில் சேவையிலும் பாதிப்பு இல்லை என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.