அசத்தலான 64 எம்.பி. கேமராவுடன் அறிமுகமானது மோட்டோ ஜி 9 பவர்!

மோட்டோரோலா நிறுவனம், அண்மையில் தனது புதிய 5ஜி போனான மோட்டோ ஜி 9 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. தற்பொழுது இதனை தொடர்ந்து, பட்ஜெட் போன் செக்மென்ட்டில் மோட்டோ ஜி 9 பவரை அறிமுகம் செய்தது. இதில் பெரிய பேட்டரி, சிறந்த கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.

டிஸ்பிளே:

இதன் டிஸ்பிளேவை பொறுத்தளவில் 6.8 இன்ச் HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 720×1,640 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. இந்த பட்ஜட்டிற்கு 720 பிக்ஸல் டிஸ்பிளே என்பது டெக் விமர்சகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேமரா:

கேமராவை பொறுத்தளவில் இதில் 3 கேமரா செட்டப் வசதி உள்ளது. 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் + 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் வசதி உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி:

இந்த மோட்டோ ஜி 9 பிளஸ்-ல் 6000 எம்ஏஎச் கொண்ட ஒரு பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதனை சார்க் செய்ய 20 W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதன் ஆயுட்காலம் 60 மணிநேரம் வரை இருக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர அம்சங்கள்:

இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் மூலம் இயங்குகிறது. இதில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடனும், 512 ஜிபி வரை எஸ்பண்ட் செய்துகொள்ள மெமரி கார்ட் ஸ்லாட் உள்ளது. இணைப்புகளை பொறுத்தளவில் வைஃபை, ப்ளூடூத் v5, யூஎஸ்பி டைப்-சி போர்ட், பின்கர்ப்ரிண்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதிகள் இடம்பெற்றுள்ளது.

விலை:

மோட்டோ ஜி 9 பவர் , 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியின் விலை ரூ.11,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல், டிசம்பர் 15-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.