BIS சான்றிதழை பெற்ற மோட்டோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்!

மோட்டோரோலா நிறுவனத்தில் புதிய மோட்டோ ஜி 9 பிளஸ், இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டது. இந்த புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் மொபைலுக்கு இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) சான்றிதழை பெற்றதாக தகவல்கள்வெளியானது. இதனால் இந்த ஸ்மார்ட் போன், இந்தியாவில் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட Moto G9 Plus மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6 இன்ச் பெரிய டிஸ்பிளே, 2400 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்ட புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே. இந்த மோட்டோ மோட்டோ ஜி 9 பிளஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி ஆக்டா-கோர் பிராஸருடன் வருகிறது. இதன் பேஸ் வேரியண்ட், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி எனவும், ஸ்டாக் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்குகிறது.

கேமராவை பொறுத்தளவில், இதில் நான்கு கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முதலில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள், 2 மெகாபிக்சல் டெப்த் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் வருகிறது. முன்புற கேமராவை பொறுத்தளவில், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி திறனும், அதனை சார்ச் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இது ஐரோப்பிய விலைப்படி, 4+128 ஜிபி மாடல் 299 யூரோவாகும் (இந்திய மதிப்பில் ரூ,26,000) விற்கப்பட்டு வருகிறது.