அறிமுகமானது மோட்டோ-வின் 5ஜி போன்.. விலை என்ன தெரியுமா?

மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியானது. அதன் விலை 20,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) ஸ்மார்ட் போன்க்கான இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) சான்றிதழை கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இன்று இந்தியாவில் இந்த ஸ்மார்ட் போன் அறிமுகமானது.

இந்த மோட்டோ ஜி 9 பிளஸ், 5ஜி வசதியுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 ஜி வசதியுடன் அறிமுகமானது. இதன்காரணமாக இந்த மோட்டோ ஜி 9 பிளஸ்-ல் ஸ்னாப்டிராகன் ஆக்டாகோர் 750ஜி 5ஜி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்பிளேயை பொறுத்தளவில், இதில் 6.7 இன்ச் FHD+ max விஷன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 2400×1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளதாகவும், 20:9 அஸ்பெக்ட் ratio கொண்டுள்ளது.

கேமிங்கை பொறுத்தளவில் இதில் அட்ரினோ 619 GPU கொண்டுள்ளது. இதனால் ஹை கிராபிக்ஸ் கேம்ஸ் விளையாட முடியும். கேமராவை பொறுத்தளவில் பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, PDAF-ஐ கொண்டுள்ளது. 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் f/2.2 aperture, 2 எம்பி மேக்ரோ கேமரா f/2.4 aperture

செல்பி கேமராவை பொறுத்தளவில் இதில் 16 எம்பி சிங்கிள் பன்ச் ஹோல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. அதனைத்தவிர்த்து, இதில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், பிங்கர் பிரிண்ட் சென்சார், LPPDDR4x ரேம் 5000 Mah பேட்டரி, அதனை சார்ஜ் செய்ய 20W டர்போ பவர் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 10-வுடன் வருகிறது.

மேலும் இதில் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ac, ப்ளூடூத் 5.1, GPS, USB type c கேபிள் உள்ளிட்ட வசதிகளுடன் வந்தது. இதன் விலையை பொறுத்தளவில், 6+128 ரூ. 20,999 க்கு டிசம்பர் 7 ஆம் தேதி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது.