பேய் விரட்டுவதாக கூறி குழந்தையை கொன்ற தாய்க்கு 25 ஆண்டு சிறை!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரமெண்டோ நகரை சேர்ந்தவர் உன்ட்வான் ஸ்மித் .இவரது மனைவி ஏஞ்சலா பக்கின். இந்தத் தம்பதிக்கு 3 வயதில் மையா என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த 2016- ஆம் ஆண்டு மையாக்கு பேய் பிடித்ததாக ஏஞ்சலா கூறினார். இதையடுத்து குழந்தையை வெயிலில் உட்கார வைத்தால் அவரது உடலில் உள்ள பேய் போய்விடும் என நினைத்து குழந்தையை காருக்குள் அமர வைத்து  காரை 10 மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் நிறுத்தினர்.

தனியாக காரில் இருந்து குழந்தை இறந்தது வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் இறந்தது. தவறான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சோதனை செய்த போலீசார் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்தனர்.

இதை தொடர்ந்து குழந்தை சாவுக்கு காரணமாக இருந்த உன்ட்வான் ஸ்மித் ,  ஏஞ்சலா பக்கின் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சாக்ரமெண்டோ நகர கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

சாக்ரமெண்டோ மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உன்ட்வான் ஸ்மித்  மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

author avatar
murugan