வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் மாமியாரும்….. மருமகளும்…..

14
  • ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து, அவரது தாயாரும், அவரது மனைவியும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகமெங்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. தேனி மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் பிரசாரம் செய்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தேனி மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளரான ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து, அவரது தாயாரும், அவரது மனைவியும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவருடன் இணைந்து அதிமுக தொண்டர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.