கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு பெரும்பாலான ஜப்பானியர்கள் எதிர்ப்பு!

கொரோனா வைரஸ் இன்னும் பரவிவரும் சூழ்நிலையிலும் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், டோக்கியோவின் 61 சதவீத மக்கள் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வேண்டும் என்றுதான் கூறியுள்ளனராம்.

கடந்த ஒரு வருட காலமாக உலகையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தற்போது புதியதாக மீண்டுமொரு கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது என மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஜப்பானில் கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு வருகிற ஜூலை 23ஆம் தேதி இந்த ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது குறித்து டோக்கியோவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலான ஜப்பானியர்கள் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் கூறியுள்ளனராம். 61 சதவீதம் பேர் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், 36 சதவீதம் பேர் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகள் நடத்தலாம் என ஆதரவும் தெரிவித்து உள்ளனராம்.

author avatar
Rebekal