அதிக கேட்ச்களை பிடித்து ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த ஜோ ரூட் !

2019 உலகக்கோப்பை தொடர் சிறப்பாக நடந்து முடிவடைந்து. இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசீலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி தடைகளை தாண்டி தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற மிக்கிய காரணமாக பென் ஸ்டோக்ஸ் திகழ்ந்தார். இவர் 84 ரன்கள் மற்றும் சூப்பர் ஓவரில் 9 ரன்கள் குவித்திருந்தார்.

இந்த போட்டியில் ஜோ ரூட் நியூசீலாந்து அணியன் ஆல்ரவுண்டரான ஜேம்ஸ் நிஷாம் கேட்ச் பிடித்து குறிப்பிடதக்க சாதனையை பதிவு செய்தார். இவர் நடப்பு உலகக்கோப்பையில் மொத்தம் 13 கேட்ச்களை பிடித்து உலகக்கோப்பையில் அதித கேட்ச் பிடித்த வீரராக திகழ்கிறார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் 2003ம் ஆண்டு 11 கேட்ச்கள் பிடித்து முதல் இடத்தில் இருந்தார். தற்போது  பாண்டிங் சாதனையை ஜோ ரூட் முறியடித்து முன்னிலை வகிக்கிறார். இதன் பிறகு டு பிளெசிஸ் நடப்பு உலகக்கோப்பையில் 10 கேட்ச்களை பிடித்துள்ளார்.

author avatar
Vidhusan