கிறிஸ் கெயிலின் அடுத்த சாதனையையும் முறியடிக்க துடிக்கும் மோர்கன்!

நேற்று முன்தினம் நடந்த 24-வது லீக் போட்டியில் இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான் மோதியது. முதலில் இறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 397 ரன்கள் எடுத்தது.அதன் பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் மோர்கன் 17 சிக்ஸர் விளாசினார்.இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 16 சிக்ஸர் அடித்து  கிறிஸ் கெயில் முதல் இடத்தில் இருந்தார். அந்த சாதனையை மோர்கன் முறியடித்தார்.
இந்நிலையில் உலக கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்து வீரர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். 2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது 26 சிக்ஸர்கள் குவித்தார்.
தற்போது இலங்கை அணியின் கேப்டன் மோர்கன் 22 சிக்சர்கள் அடித்து உள்ளார். இன்னும் நான்கு சிக்ஸர்கள் அடித்தால் உலக்கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
Gayle – 26 (2015)
Morgan – 22 (2019)*
Abd – 21 (2015)
Hayden – 18 (2007),

author avatar
murugan