கள்ள மார்க்கெட்டில் ஒரு டிக்கெட் ரூ.1 லட்சத்திற்கும் மேல் விற்பனை!

கள்ள மார்க்கெட்டில் ஒரு டிக்கெட் ரூ.1 லட்சத்திற்கும் மேல் விற்பனை!

நடப்பு  உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட 10 அணிகள் விளையாடி வருகின்றனர்.இதுவரை 18 லீக் போட்டிகள் முடித்து உள்ளது.அதில் நான்கு போட்டிகள் மழையால் நின்றது.
இந்நிலையில் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்தாகும் போது ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  திருப்பி கொடுத்து விடு கின்றனர்.ஆனால் பல கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட்டுகளை கள்ள மார்க்கெட்டில் கூடுதல் தொகைக்கு வாங்கி வருகின்றனர்.
நேற்றைய போட்டியை சிங்கப்பூரிலிருந்து பார்க்க வந்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர்  கூறுகையில்,இந்த போட்டியை காண நான் வேறு ஒரு நபரிடம் இருந்து கூடுதல் தொகை கொடுத்து டிக்கெட்டை வாங்கினேன்.ஆனால் போட்டி ரத்தானதால் நான் கொடுத்த கூடுதல் தொகையை இழந்து விட்டேன் என கூறினார்.
மேலும் இந்தியா -பாகிஸ்தான் போட்டிகான டிக்கெட் கள்ள மார்க்கெட்டில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் வரை விற்கப்படுகிறது என கூறினார்.
 

author avatar
murugan
Join our channel google news Youtube