சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை – உயர்நீதிமன்றம்

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

சென்னையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பகவத் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகள், நடைபாதை பணிகள், அரசு அலுவலக  கட்டிடங்கள் ஆகியவை தரமானதாக இல்லை என கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரசு சார்பில் போடப்படும் சாலைகள் 6 மாதங்களில் பழுதடைந்து விடுவதாகவும், இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்வதில்லை என்றும் நீதிபதியிடம் புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்தார். இதனையடுத்து, இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, நீதிபதிகள் கூறுகையில், சாலைகள் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக உள்ள விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும், நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை, அடிப்படை கல்வியை முழுமையாக வழங்கப்படவில்லை, அனைவருக்கும் உணவு கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஓட்டு போட முடியாமல் போனது மனசு வேதனையா இருக்கு -சூரி!

Soori  : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…

6 mins ago

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா.!

Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்  பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…

9 mins ago

மக்களவை தேர்தல்! 50 சதவீதத்தைக் கடந்தது வாக்குப்பதிவு… எந்த தொகுதியில் அதிகம்?

Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…

29 mins ago

உங்க வீட்டுக்கு பெயிண்டிங் பண்ண போறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…

30 mins ago

கிரிக்கெட் கேரியரில் சிறந்த தருணம் அது தான் !! தோனியை புகழ்ந்த ராகுல் !

ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…

53 mins ago

அட்ராசக்க! 5,500Mah பேட்டரி..50MP கேமரா..அசத்தல் அம்சங்களுடன் வருகிறது vivo V30e 5G!

Vivo V30e  : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…

55 mins ago