ஸ்புட்னிக்-5 தடுப்பூசி சோதனைக்கு 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பம்.!

ஸ்புட்னிக்-5 தடுப்பூசி சோதனைக்கு 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மாஸ்கோவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை செய்ய 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், 700 க்கும் மேற்பட்டோருக்கு இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று அறிவித்தது.

தற்போது தடுப்பூசி சோதனை செய்ய 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று மேயர் செர்ஜி சோபியானின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், 700 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் அனைவரும் நன்றாகஉள்ளார்கள் என்றும் சோபியானின் கூறினார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.