இந்த மாத இறுதிக்குள் பூனேயில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் – சுகாதாரத்துறை.

இந்த மாத இறுதிக்குள் பூனேயில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில்,புனே மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 82 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், இறப்பு விகிதம் 2.30 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டும் என்று சுகாதாரத்துறையினரால் கணிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த காலக்கட்டத்துக்குள் மேலும் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை கணித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.