அமெரிக்காவில் ஒரே நாளில் 50,000க்கும் மேல் கொரோனா பாதிப்பு உறுதி.!

அமெரிக்காவில் ஒரே நாளில் 50,000க்கும் மேல் கொரோனா பாதிப்பு உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி வருகிறது. அட்லாண்டிக்கில் உள்ள கொரோனா அறிக்கையின் படி நேற்று, கடந்த 24 மணி நேரத்தில் 50,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா உறுதியானது என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பல இடங்களில் கேசலோட்ஸ் ஸ்பைக் காணப்படுகிறது.அங்கு மொத்த பாதிப்பு 2,837,606 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 1,31,503ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,191,838 ஆக அதிகரிப்பு.

இந்நிலையில் உலகளவில் கொரானாவின் பாதிப்பு ஒரு கோடியே 10 லட்சத்தையும் தாண்டி இன்னும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் இதுவரை உலக அளவில் 11,017,219 கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில்,  அவர்களில் 524,752பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.