மேற்கு வங்கத்தில் 300 -க்கும் மேற்பட்ட பாஜக-வை சார்ந்தவர்கள் கொல்லப்பட்டனர்.. அமித் ஷா..!

மேற்கு வங்கத்தில் 300 க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதா சார்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் வன்முறை உச்சத்தில் உள்ளது. 300 க்கும் மேற்பட்ட பாஜக-வை சார்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் விசாரணை ஒரு அங்குலம் கூட நகரவில்லை என ஷா நேற்று சுற்று பயணத்தை முடித்து விட்டு மேற்கு வங்காளத்திலிருந்து செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறினார்.

வருகின்ற மாநில சட்டசபை தேர்தலில் 294 இடங்களில் 200- க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் இலக்கை பாஜக  நிர்ணயித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நடந்த நாடாவின் மீதான தாக்குதலைக் கண்டித்த அமித்ஷா, இந்த தாக்குதல் நட்டா மீது மட்டுமல்ல, மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் மீதும் தான் என்று கூறினார்.

அடுத்தாண்டு மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா பிரச்சாரத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் கொல்கத்தா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan