இந்தியாவிற்கு 100 மில்லியன் டாலருக்கு அதிகமான மருத்துவ உபகரணங்கள் – அமெரிக்கா

கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்காக 100 மில்லியன் டாலருக்கு அதிகமான மருத்துவ பொருட்களை அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவலால் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பாதிக்கப்படுகிறார்கள். நோயாளிகளின் எண்ணிக்கை அதிரிப்பதால் மருத்துவம் சார்ந்த ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி என பல்வேறு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் பல கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவுதாக தெரிவித்துள்ளது.

அந்த வகையில், ஆரம்பத்தில் கொரோனாவால் கடுமையான இழப்பை சந்தித்த அமெரிக்காவுக்கு உதவியது. தற்போது. இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். அதன்படி, கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு அமெரிக்கா 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான பொருட்களை அனுப்புவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த பொருட்களில் 1,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 15 மில்லியன் என் 95 மாஸ்க் மற்றும் 1 மில்லியன் ரேபிட் கிட் அனுப்புவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது சொந்த ஆஸ்ட்ராஜெனெகா உற்பத்தி பொருட்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது. இது 20 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை தயாரிக்க பயன்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் ஆரம்ப காலத்தில் அமரிக்கா சிரமப்பட்டபோது இந்தியா, உதவி செய்தது போல, இந்தியாவுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவ அமெரிக்கா உறுதியுடன் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்