உலகளவில் 1 கோடியையும் கடந்து இன்னும் குறையாத கொரோனா பாதிப்பு!

உலகளவில் கொரானாவின் பாதிப்பு ஒரு கோடியே 9 லட்சத்தையும் தாண்டி இன்னும் குறையாமல்

By Rebekal | Published: Jul 03, 2020 10:52 AM

உலகளவில் கொரானாவின் பாதிப்பு ஒரு கோடியே 9 லட்சத்தையும் தாண்டி இன்னும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் இதுவரை உலக அளவில் 1,09,74,421 கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில்,  அவர்களில் 523,242 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் உலக அளவில் 208,864 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 5,155 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 6,135,272 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர்த்து, தற்போது மருத்துவமனையில் 4,315,907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc