2050 ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியனுக்கு அதிகமான மக்கள் இடப்பெயர்ச்சி அடைவார்கள்!

2050ஆம் ஆண்டுக்குள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடப்பெயர்ச்சி அடைவார்கள் என IEP நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருகிற 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட 10 மில்லியனாக உயரும் எனவும், இதனால் வளங்களுக்கான போராட்டமும் தேவையற்ற சண்டைகளும் அதிகம் வரும் எனவும் பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவன குழு IEP தெரிவித்துள்ளது. மேலும் மத்திய ஆசியா மற்றும் கிழக்கு நாடுகளில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழக்கூடிய 1.2 பில்லியன் மக்கள் 2050 ஆம் ஆண்டுக்குள் வேறு இடங்களில் குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இப்பொழுது உலகில் 60% குறைவான புதிய நீர் கிடைத்துள்ளது என்றும், ஆனால் அதே நேரத்தில் அடுத்த 30 ஆண்டுகளில் உணவுக்கான தேவை 50 சதவீதம் உயரும் எனவும் கணிக்கப் படுகிறது. ஆசியாவில் இது நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வளர்ந்த நாடுகளுக்கு அதிக அளவில் இடம் பெறுவார்கள் எனவும் IEP நிறுவனர் ஸ்டீவ் கில்லிலியா அவர்கள் கூறியுள்ளார்.
author avatar
Rebekal