,

இன்று துவங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.! எதிர்க்கட்சிகளின் விவாதங்களும்… ஆளும்கட்சியின் மசோதாக்களும்…

By

Parliment

இன்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்குகிறது.

இந்த வருட நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது என மத்திய விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட பிறகு கூடும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடராக இருப்பினும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மழைக்கால கூட்டத்தொடர் குறித்த ஆலோசனை நடத்துவதற்கு, நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் 30-க்கும் அதிகமான கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு, மாநில ஆளுநர்களின் செயல்பாடு, மத்திய விசாரணை அமைப்புகளின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல ஆளும்கட்சி, 32 மசோதாக்களை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த மசோதாக்களை மக்களவை , மாநிலங்களவை என இரண்டு சபைகளிலும் நிறைவேற்றி, அதன் பின்பு சட்டமாக இயற்றப்படவும் உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு மழைக்கால கூடுதல் ஆரம்பமாக உள்ளது.