முக்கியச் செய்திகள்
மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு.! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!
மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளும், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 4 நாள் முன்னதாக கூட்டத்தொடர் முடித்துவைப்பு.
கடந்த மாதம் (ஜூலை) 18ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடரானது, மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் தொடங்கியது.
இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிறைவு பெரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது.
அடுத்தடுத்து, வடமாநிலங்களில் பண்டிகை வரவுள்ளதால், உறுப்பினர்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கூட்ட தொடர் முடித்துவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
வந்தே மாதரம் முழங்க, இரு அவைகளும், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்து குளிர்கால கூட்டத்தொடர் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் தேர்தல், துணை குடியரசு தலைவர் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
