, , ,

மழைக்கால கூட்டத்தொடர் : எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்.!

By

PM Modi

மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில், இந்திய மக்களின் முக்கியமான மசோதாவான தகவல் பாதுகாப்பு மசோதா இன்று நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது என தெரிவித்தார்.

மேலும், இந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்ற அனைத்து கட்சி ஒத்துழைப்பும் தேவை. சட்ட மசோதாக்கள் மீதான ஆக்கபூர்வமான விவாதங்கள் தான் அதனை மேலும் வலுவாக்கும். மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இன்று மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தற்போது துவங்கியுள்ளது.