அமெரிக்காவில் தோன்றிய மங்கிபாக்ஸ் வைரஸ்..!-20 ஆண்டுகளுக்கு பின் ஒருவருக்கு பாதிப்பு..!

அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அரிய மங்கிபாக்ஸ் வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நைஜீரியாவிலிருந்து அமெரிக்க வந்துள்ளார். இதன் பின்னர் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் பரிசோதனை செய்துகொண்டுள்ளார். இந்த சோதனை முடிவில் இவருக்கு மன்கிபாக்ஸ் வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளதாவது, பாதிக்கப்பட்ட நபர் லாகோஸ் நகரத்திலிருந்து பயணத்தை தொடங்கி, நைஜீரியா, டல்லாஸ் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார். தற்போது இவருக்கு டல்லாஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், இவருடன் விமானத்தில் பயணித்த மற்ற நபர்களை தொடர்பு கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. மன்கிபாக்ஸ் வைரஸ் என்பது பெரியம்மையுடன் தொடர்புடைய பாதிப்பு. இது அரிய வகையில் ஏற்படக்கூடிய வைரஸ் என்றாலும் இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும்.

முதலில் காய்ச்சல் ஏற்படும். இதனை தொடர்ந்து சிறிய கட்டிகள் போன்ற வீக்கம் முகம் மற்றும் உடல் முழுவதும் பரவ ஆரம்பிக்கும். இந்த வைரஸின் தாக்கம் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என்று இந்த மையம் தெரிவித்துள்ளது.