UPI மூலம் பணப்பரிமாற்றம்! ஜூன் மாதத்தில் இத்தனை பில்லியன் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா?

ஜூன் மாதத்தில், UPI மூலம் 1,422 மில்லியன் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அதிகமானோர் யுபிஐ மூலமாக பணம் பரிமாற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மே மாதத்தில் 1.23 பில்லியனில் இருந்து 8.94 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்த நிலையில், கொரோனா காரணமாக இதன் வளர்ச்சி, ஏப்ரல் மாதத்தில் ரூ .1.51 லட்சம் கோடி மதிப்பில் இருந்து, 999.57 மில்லியனாகக் குறைந்துள்ளது.

இதனை தொடர்ந்து மே மாதத்தில் இருந்து, இதன் வளர்ச்சி அதிகரிக்க தொடங்கிய நிலையில், மே மாதத்தில், யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ரூ .2.18 லட்சம் கோடி மதிப்புள்ள 1.23 பில்லியனாக இருந்தது என என்.பி.சி.ஐ தெரிவித்துள்ளது.

இந்த 28 ஜூன் 2020 வரை மட்டும், யூ பி ஐ வழியாக 1,422 மில்லியன் பணப் பரிமாற்றங்கள் நடந்து இருக்கிறதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.